மலையாளம், தமிழ் திரையுலகில் தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகை பார்வதி திருவோத்து, ‘கசபா’ திரைப்படம் தொடர்பாக மம்முட்டியின் கதாபாத்திரத்தை விமர்சித்தபோது தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து மனம் திறந்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இணையவழி விமர்சனங்கள், கொலை மிரட்டல்கள், பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் போன்ற துன்புறுத்தல்கள் தீவிரமடைந்தபோது அச்சத்தில் வாழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நடிகை பார்வதிக்கு கொலை- பாலியல் தொல்லை மிரட்டல்
