மதுராந்தகம்: கடந்த 6-ஆம் தேதி தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் 1,84,423 வாக்குகள் பதிவான நிலையில் தற்போதைய நிலவரப்படி, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 23,885,திமுக வேட்பாளர் பரந்தாமன் 15,583, அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 14,065 வாக்குகளை பெற்றுள்ளனர்.
அதே நேரம் தற்போதைய நிலவரப்படி தாராபுரத்தில் நீண்ட நேரமாக முன்னிலை வகித்து வந்த அதிமுக வேட்பாளர் பானுமதி பின்னடைவை சந்தித்துள்ளார். தாராபுரம் தொகுதியில் மொத்தம் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா 16,201, அதிமுக வேட்பாளர் பானுமதி 14,807, திமுக வேட்பாளர் சுகன்யா 13,797 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
