சென்னை: மனைவி அளித்த வன்கொடுமை புகாரின் அடிப்படையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி ஜாபர் சித்திக்கை சிபிசிஐடி போலீசார் நேற்றிரவு (அக்.8) கைது செய்தனர். பின்னர் அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததுடன், தன்னைச் சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக ஜாபர் சித்திக் மீது அவரது மனைவி புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக டிஜிபியிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல பெண்களுடன் தொடர்பு.. சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி கைது
