குஜராத்தின் சுரேந்திரநகரில் கள்ளக்காதலனுடன் ஓடிப்போக முயன்ற பெண், தனது கணவர் மற்றும் உறவினர்களால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். அப்பெண் ஒரு மரத்தில் கட்டிவைக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பாக, அப்பெண்ணின் கணவர் மற்றும் 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது பாதுகாப்பகம் ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
காதலனுடன் ஓடிப்போன இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. கணவன் வெறிச்செயல்
