Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாய் குறுக்கே வந்ததால் மரத்தில் பைக் மோதி இளைஞர் பலி!

ஊத்துக்கோட்டை அருகே சாலையில் நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி பைக் மரத்தில் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்துக்கோட்டை அருகே செஞ்சியகரம் கிராமத்தில் வசித்து வந்தவர் தருண் (18). இவர் நேற்று ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் பைக்கில் வீடு திரும்பினார். அப்போது தொம்பரம்பேடு பகுதியில் சென்றபோது திடீரென எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதி, அருகில் உள்ள வயல் வெளியில் விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த தருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை போலீசார் தருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் செஞ்சியகரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!