கேரளாவின் கொச்சி அருகே திருப்பூணித்துறையைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுமேஷ்குமார், தனது வங்கிக் கணக்கில் திடீரென ரூ.3,500 கோடிக்கும் மேல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தனியார் வங்கியில் இருந்து இந்தத் தொகை வந்தது தெரியவந்தது. முதலில் மகிழ்ச்சியடைந்தாலும், பின்னர் சிக்கல் வருமோ என அஞ்சிய சுமேஷ்குமார், வங்கி மேலாளரைத் தொடர்பு கொண்டார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அன்றே அது சரிசெய்யப்பட்டு தொகை மீட்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வங்கிக் கணக்கில் ரூ.3,500 கோடி டெபாசிட்.. அதிர்ச்சியில் கடை ஓனர்
