Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலீசாரிடம் சிக்கிய ரவுடி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

போலீசாரிடம் சிக்கிய ரவுடி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

தூத்துக்குடி மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரியா அந்தோணி ஆக்னல் (31). இவர் மீது 2 கொலை வழகுகள் உட்பட மொத்தம் 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், இவர் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் திருச்செந்தூர் அருகே சோனகன்விளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இவரைத் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்துத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர், தூத்துக்குடி பூபாலராயபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களில் பதிவான கைரேகைகள், மரியா அந்தோணி ஆக்னலின் கைரேகைகளுடன் ஒத்துப்போவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காகத் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் சென்றுள்ளனர்.

போலீசாரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த மரியா அந்தோணி ஆக்னல், தான் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார். உடனடியாகக் படுகாயமடைந்த அவரை மீட்ட போலீசார், சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!