Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் முருகன் சிலை மீண்டும் பிரதிஷ்டை

தோகைமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் முருகன் சிலை மீண்டும் பிரதிஷ்டை

குளித்தலை அருகே தோகை மலையில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாற்றப்பட்ட முருகன் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகை மலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதம் சுவாமி கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் கடந்த 2025 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேகத்திற்கு பின்னர் பாலதண்டாயுத சுவாமி கோவிலில் அங்கிருந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பால தண்டாயுதபாணி சுவாமி மூலவர் சிலை மாற்றப்பட்டு இருந்ததை கண்டு பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து இந்து சமய அறநிலைத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அர்ச்சகர் மூலவர் சிலையை மாற்றி இருப்பதை அறிந்தனர் மேலும் சிலையானது அருகில் இருந்த சுனையில் இருந்து மீட்கப்பட்டு சிலைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து தோகை மலையைச் சேர்ந்த சங்கிலி முத்து என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இது குறித்து வழக்கு பதிவு செய்து சிலை மாற்றுவதற்கு காரணமாக இருந்த அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்கவும் மீண்டும் பழமை வாய்ந்த பாலதண்டாயுதபாணி சிலையை நிறுவ வேண்டுமென தொடர்ந்து வழக்கில் தற்போது 10 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பழமை வாய்ந்த பாலதண்டாயுதமனை சிலையை மூலவர் நிறுவ கோர்ட் உத்தரவிட்டது.

இதனை அடுத்து இன்று காலை சிறப்பு வேலு பூஜைகள் நடைபெற்ற பின்னர் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பால தண்டாயுதபாணி சிலை அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

error: Content is protected !!