மின்பற்றாக்குறையை சமாளிக்க சராசரியாக ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் 4500 மெகாவாட் மின்சாரத்தை வாங்க தனியார் நிறுவனங்களுடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், மின்வாரியம் ஏற்கனவே ரூ.2.47 லட்சம் கோடி கடனுடன் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ.10,000 கோடிக்கும் கூடுதலாக செலுத்துகிறது. அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என கூறியுள்ளார்.
மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்வதா? – அன்புமணி கேள்வி
