செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் இடைத் தேர்தல் பரப்புரை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த திமுக நிர்வாகி வழக்கறிஞர் குமரவேல் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மு.க.ஸ்டாலின், குமரவேலின் இரு மகள்களின் கல்வி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் கட்சி சார்பில் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
நெஞ்சுவலியால் உயிரிழந்த திமுக நிர்வாகி.. மு.க.ஸ்டாலின் ஆறுதல்
