மின் துறையைப் பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும். அனைத்து பகுதி மக்களையும் பாதிக்கும் மற்றும் மின் விநியோகத்தைத் தனியாரிடம் விடும் ஸ்மார்ட் மீட்டர் திட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.
தமிழக அரசு அறிவித்துள்ள மின் பாதைகள் மற்றும் மின் உற்பத்தியைத் தனியார் மயமாக்கும்
பிபிபி திட்டத்தை ரத்து செய்து, அரசே ஏற்று நடத்த வேண்டும்.
தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கின்ற 5 ஆண்டு ஒப்பந்தமுறை முறையைத் திரும்பப் பெற வேண்டும். கிராஜிவிட்டி தொகையை ரூ. 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போலவும், குடும்பநல நிதி 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தியதை முன் தேதியிட்டு 1.9.21 முதல் மின் ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
வாரிய ஆணை 2-ஐ ரத்து செய்திட வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு – திருச்சி மெட்ரோ வட்டம் சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) மிளகுபாறையில் உள்ள துணை மின் நிலைய வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மின்துறை பொறியாளர் அமைப்பு துணை பொதுச்செயலாளர் இருதயராஜ், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் பழனியாண்டி,
டி.என்.இ.பி எம்ப்ளாயீஸ் பெடரேஷன் தலைவர் சத்திய நாராயணன், செயலாளர் சிவச்செல்வன்,
தொமுச கோட்ட செயலாளர் பாஸ்கரன், பொறியாளர் சங்க கோட்ட செயலாளர் பிரதீப்,
பொறியாளர் கழக கோட்ட செயலாளர் ஜெரால்ட், டி .என்.இ.பி
அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் பாலச்சந்தர் ஆகியோர் பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
