திருச்சி வயலூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜோ பிராங்க் சுரேந்திரன். இவர் பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று வயலூர் ரோடு பகுதியிலுள்ள ஒரு தனியார் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்து உள்ளார். பிறகு இவருடைய செல்போனில்வாட்ஸ் அப் மூலம் பணம் எடுத்ததற்கான உறுதிப்படுத்தல்குறுஞ்செய்தி வந்தது. அதில் அவர் ஆம் என்று திரும்பி பதிலளித்தார். பிறகு சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 4 லட்சத்து 98 ஆயிரத்து 833 பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்தது.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேந்திரன் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆன்லைனில் ரூபாய் 4 லட்சத்து 98 ஆயிரத்து 833பணத்தை மோசடி செய்து எடுத்த மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சியில் வியாபாரியிடம் ஆன்லைனில் ரூ.4.98 லட்சம் மோசடி!
