Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கத்தில் வாலிபர்கள் கோஷ்டி மோதல் –கத்திக்குத்து!

ஸ்ரீரங்கத்தில் வாலிபர்கள் கோஷ்டி மோதல் – கத்திக்குத்து!

திருச்சி திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 27) இவர் எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஒரு தனியார் பிஸ்கட் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 14 ந்தேதி திருவரங்கம் பகுதியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அங்கு வந்த
நடு கொண்டையம்பேட்டையை சேர்ந்த முருகானந்தன், ஜெய ஆனந்தன் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டு சண்டை போட்டுக் கொண்டனர். பிறகு அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர் இந்நிலையில்
நடு கொண்டையம்பேட்டை பகுதியில் சக்திவேல் வந்த போது அவரை வழிமறித்து முருகானந்தம், ஜெயானந்தன் ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டு சக்திவேலை பீர் பாட்டிலால் குத்தி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சக்திவேல் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சக்திவேல் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் முருகானந்தன், ஜெயானந்தன் மீது வழக்கு பதிவு செய்வது விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோன்று ஜெயானந்தன் திருவரங்கம் போலீசில் மற்றொரு புகார் கொடுத்தார். அந்த மனுவில் சக்திவேல் மற்றும் அவரது நண்பர் சரவணன் உள்ளிட்டோர்
தன்னிடம் தகராறு ஈடுபட்டு
பீர் பாட்டிலால் குத்தி விட்டு ஓடிவிட்டனர் என புகாரில் கூறியுள்ளார்.
இந்த புகாரின் பேரில் சக்திவேல், சரவணன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!