Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பீகாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 13 சிறுவர்கள் பலி!

பீகாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து 13 சிறுவர்கள் பலி!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் நேற்று ஷியாம்சந்த் கிராமத்தில் இருந்து திருவிழாவிற்கு சென்ற 20 பேர் கங்கை ஆற்றில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது  படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் மீட்கப்பட்டுள்ள  நிலையில் 13 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

ராகோபூர் திவாரா பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சிறுவர்கள் சிலர் படகில் பயணம் செய்துள்ளனர். திரும்பி வரும் வழியில் எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து படகு நதியில் கவிழ்ந்தது.

தகவலறிந்து வந்த வைஷாலி மாவட்ட ஆட்சியர், SDRF மற்றும் NDRF மீட்புக் குழுவினருடன் இணைந்து மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்தினார். இந்த விபத்தில் 13 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும், விபத்தில் சிக்கியவர்களில் 7 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அவர்கள் உடனடி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூர விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!