Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நடுவழியில் தீப்பிடித்த அரசுப் பேருந்து – உயிர்தப்பிய பயணிகள்!

திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டத்துக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு அரசு டவுன் பஸ் புறப்பட்டு சென்றது.

குரும்பூர் அருகே நல்லூர் ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தற்காலிக சர்வீஸ் ரோட்டில் சென்றபோது, பஸ்சின் ஸ்டீயரிங் அருகில் திடீரென கரும்புகை குபுகுபுவென வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் தவசிமுத்து உடனே சாலையோரமாக பஸ்சை நிறுத்தி விட்டு, இரு தானியங்கி கதவுகளையும் திறந்து விட்டார். மேலும் அனைவரையும் உடனே பஸ் சில் இருந்து கீழே இறங்குமாறு கூறினார்.

பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்தவாறு வேகமாக கீழே இறங்கினர். சில வினாடிகளில் பஸ்சில் தீப்பிடித்து மளமளவென்று கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சி அளித்தது. மின்கசிவு காரணமாக பஸ்சில் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!