திருவாரூர் அருகே செவிலியர் ஒருவர் குளித்து கொண்டிருந்தபோது அதனை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சீனிவாசபுரம் கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்த ரஜினி சக்தி (54) என்பவரே இந்த செயலில் ஈடுபட்டு பிடிபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட ரஜினியின் செல்போனில் மேலும் சில பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் வேறு எவரையாவது இதுபோன்று ஏமாற்றியுள்ளாரா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செவிலியர் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த நபர் கைது
