நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுபோனதால் மனமுடைந்த கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பையனூரைச் சேர்ந்த சி.ஸ்ருதி (24) என்பவர் நேற்று இரவு பெரும்பா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஜனவரி மாதம் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. இந்த நிலையில், இளைஞர் திருமணம் செய்ய மறுத்து பின்வாங்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில், மனவேதனையால் ஸ்ருதி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினர். இது குறித்துபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகினற்னர்.
திருமணத்தை நிறுத்திய இளைஞர்.. 24 வயது இளம்பெண் தற்கொலை
