திருவண்ணாமலையில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்ய பெண் தர மறுத்த ஆத்திரத்தில் காதலித்த பெண்ணை கடந்த 2021ஆம் ஆண்டு, வேட்டவலத்தைச் சேர்ந்த ராபின் கடத்திச் சென்று பலாத்காரம் செய்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினர் அளித்த புகாரின் பேரில், ராபின் கைது செய்யப்பட்டார். விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
