Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மைசூரு தசரா திருவிழாவில் பழமையான கார்களின் அணிவகுப்பு

மைசூரு தசரா திருவிழாவில் பழமையான கார்களின் அணிவகுப்பு

 உலக புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவை ஒட்டி அரண்மனை வளாகத்தில் நடைபெற்ற பழங்கால கார்களின் அணிவகுப்பு கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. கர்நாடகா மாநிலம் மைசூரு அரண்மனை வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும், தசரா விழா உலக அளவில் பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டிற்கான தசரா விழா வரும் 21 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ள நிலையில் மைசூரு அரண்மனை வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர், அதன் ஒரு பகுதியாக கர்நாடகா விண்டேஜ் கிளாசிக்கல் கார் கிளப் சார்பாக நடந்த பழமையான கார்களின் அணிவகுப்பு கண்காட்சி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

க்ளோஸ்டர், ஜாகுவார், மாரிஸ் , வோக்ஸ்வாகன், பென்ட்லி மோட்டார்ஸ், கிறைஸ்லர், பிரீமியர் பிரசிடெண்ட் உள்ளிட்ட விண்டேஜ் கார்களை அதன் உரிமையாளர்கள் காட்சி படுத்தியுள்ளனர்.

மைசூரு மகாராஜா பயன்படுத்திய 1947 மாடல்டைம்லர் பென்ஸ் உள்ளிட்ட கார்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளனர், இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி பழமையான கார்கள் அளிக்கப்படுவதை தடுக்கவும், கார்களின் வரலாற்றை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

மைசூரு தசராவில் இடம் பெற்றுள்ள பழம்கால கார்கள் அனைத்தும் தற்போதும் சாலைகளில் ஓடும் வகையில் பராமரித்து வருவதாக அதன் உரிமையாளர்கள் கூறினர், கர்நாடகாவின் கலை பாரம்பரியத்தை பறைசாற்றும் கலை தசரா விழாவில் விண்டேஜ் கார்களின் கண்காட்சி தசரா விழாவை மேலும் மேரு கூட்டியுள்ளது.

error: Content is protected !!