Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே சாலை விபத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் பலி!

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த உகல் கிஷோர் (28), தனது சொந்த ஊரான திருப்பூருக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் குளத்துப்பாளையம் அருகே சென்றபோது, குறுக்கே வந்த டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உகல் கிஷோர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த க.பரமத்தி போலீசார் மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த மாணவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!