நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் அக்டோபர் 15-ம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்று

தீர்ந்துவிட்டன. ரம்யா கிருஷ்ணன், மிருணா, வித்யா பாலன், சுராஜ் வெஞ்சரமூடு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில்

பல சர்ப்ரைஸ்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் திருச்சி முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரஜினியின் ரசிகர்கள் ஜெயிலர் 2 பட

போஸ்டர்களை ஒட்டி கொண்டாடி வருகின்றனர்.
12PM பாத்தாச்சு, 8 CM பாத்தாச்சு, ஒரே சூப்பர் ஸ்டார் அதனால் தான் அகிலமே சொல்லுது தலைவர் நிரந்தரம் ..போடா ஆண்டவனே நம்ம பக்கம் என்ற வசனத்துடன் போஸ்டர்கள் திருச்சி ரசிகர் மன்றம் தலைவர் கலீல் தலைமையிலான நிர்வாகிகள் பல்வேறு வாழ்த்து போஸ்டர்களை


திருச்சி முழுவதும் ஒட்டியுள்ளனர். ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
