முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளான இன்று (அக்.15), அவர் நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளை போற்றி வணங்குவதாக தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்துல் கலாமின் உயரிய சிந்தனைகளையும் அவரது தொலைநோக்கு பார்வையையும் நம் மனதில் எப்போதும் நிலைநிறுத்தி கொள்ள வேண்டும் என தனது வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவரின் கூட்டு முயற்சியால் வளமான மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கு இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் என கூறியுள்ளார்.
அப்துல் கலாமின் உயரிய சிந்தனைகளை மனதில் நிறுத்துவோம்- முதல்வர் விஜய் வாழ்த்து
