மறைந்த பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளான இன்று (அக்.15), எளிய பின்புலத்தில் பிறந்து உயரிய நிலையை அடைந்த அவரது கனவுகளையும் சேவைகளையும் போற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அறிவியல் தொழில்நுட்பத்தை கொண்டு வறுமையை வெல்ல முடியும் என்ற கலாமின் கூற்றை சுட்டிக்காட்டிய அவர், அப்துல் கலாம் ஆசைப்பட்டபடி ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கலாம் ஆசைப்பட்டபடி வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க வேண்டும்
