Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டில் மனைவியுடன் தவெக நிர்வாகி.. நாடு திரும்பிய கணவருக்கு அதிர்ச்சி-புகார்

வீட்டில் மனைவியுடன் தவெக நிர்வாகி.. நாடு திரும்பிய கணவருக்கு அதிர்ச்சி

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (47). ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், சாமிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சித்திரை செல்வி (43) இருவருக்கும் கடந்த 2013 ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

திருமணம் ஆன பிறகு இருவரும் பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வந்தனர். மகேந்திரன் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2025 ம் ஆண்டு மனைவி சித்திரை செல்வி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சென்னை புறநகர் மாவட்ட துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பள்ளிக்கரணை தவெக பகுதி செயலாளர் முகேஷ் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டு இருந்ததும், மகேந்திரன் சாம்பாதித்து

கொடுக்கும் பணத்தில் முகேஷுடன் உல்லாசமாக சென்னையில் சுற்றி திரிந்து வந்தது தெரியவந்த நிலையில் கடந்த 2025 ஏப்ரல் மாதம் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரின் அடிப்படையில் CSR மட்டுமே பதிவு செய்தனர். இது சம்மந்தமாக மகேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மகேந்திரா சிங்கப்பூரில் இருந்து சென்னை பள்ளிக்கரணை வீட்டிற்கு காலையில் சென்றதும் வீட்டினுள் மனைவி சித்திரை செல்வியுடன் தவெக பகுதி செயலாளர் முகேஷ் இருந்த நிலையில் கணவன் மகேந்திரனை பார்த்ததும் கதவை உள்ளே பூட்டிக்கொண்டாதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த கணவன் மகேந்திரன் வெளியே கதவை பூட்டிக்கொண்டு 100 க்கு கால் செய்து போலீசாரை சம்பவ இடத்திற்கு வரவைத்து முகேஷை போலீசில் பிடித்து கொடுத்துள்ளார்.

பின்னர் போலீசார் முக்கேஷை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் :-

நான் சிங்கப்பூரில் சாம்பாதித்து வாங்கிய அனைத்தையும் மனைவி சித்திரை செல்வியிடம் இருந்து பெற்று தர வேண்டும் என்றும், பள்ளிக்கரணை போலீசார் எனது மனைவியுடன் கள்ளதொடர்பில் உள்ளவர் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என்று குற்றசாட்டை வைத்த அவர் தான் சாம்பாதித்து கொடுத்த 250 சவரன் தங்க நகை, வீடு, ஆஸ்டல், சலூன் உள்ளிட்டவைகளை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

error: Content is protected !!