Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையின் அடையாளத்தை உருவாக்கிய ஸ்டாலினுக்கு நன்றி-செந்தில்பாலாஜி பளீச்

இன்று முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி வௌியிட்டுள்ள பதிவு….

2024 நவம்பர் 6ஆம் தேதி, திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டப்பட்ட கனவுத் திட்டம்தான் இன்று கோவையின் புதிய அடையாளமாக உயர்ந்து நிற்கும் ‘பெரியார் அறிவுலகம்’..

கோவையின் மண்ணில் ஒரு கட்டடத்திற்கான அடிக்கல் மட்டும் நாட்டப்படவில்லை; அடுத்த

தலைமுறையின் அறிவுப் புரட்சிக்கான விதையும் விதைக்கப்பட்டது..

ரூ.300 கோடி மதிப்பீடு, 6.98 ஏக்கர் நிலப்பரப்பு, 1.98 லட்சம் சதுர பரப்பளவில், ஏழு தளங்கள் எனப்

பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் இந்த அறிவுக் கோட்டையை, கடந்த பிப்ரவரி 28ம் தேதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாண்புமிகு தளபதி அவர்கள்..

பெரியாரின் பெயரைத் தாங்கி நிற்கும் இந்த அறிவுலகம், ஆயிரமாயிரம் இளம் உள்ளங்களில் பகுத்தறிவின் வெளிச்சத்தைப் பரப்பும்; உதயசூரியனாய் அறிவை பிரகாசிக்க செய்திடும்;

சிந்தனையை வளர்த்திடும்.. இது வெறும் செங்கற்களால் எழுப்பப்பட்ட கட்டடமல்ல; தமிழ் மாணவச் செல்வங்களின் கனவு..

ஒரு திட்டத்தை விதைத்து உருவாக்கியவரின் பெயர் நிலைத்து நிற்பதே வரலாறு..

கோவையின் அடையாளமாக பெரியார் அறிவுலகத்தை வழங்கிய மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கோவை மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!