தஞ்சை மாவட்டம் மற்றும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து அனைத்து ஆட்டோ, டாக்ஸி மற்றும் வேன் ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தஞ்சை தனியார் கார்ப்பரேட் டாக்ஸி நிறுவனம் , தஞ்சை ரயில் நிலையம் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் மருத்துவக் கல்லூரி பெரிய கோவில் ராசா மிராசுதார் மருத்துவமனை மாரியம்மன் கோவில் பெரிய வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் புக்கிங் பாயிண்ட் அமைக்க உள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே இலவச பேருந்து காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து ஆட்டோ டாக்ஸி வேன் ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலை நீடித்தால் தங்கள் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும் தற்போது இதன் முதல் கட்டமாக தஞ்சை புகைவண்டி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புக்கிங் பாயிண்ட்டை அப்புறப்படுத்த வேண்டும் கார்ப்பரேட் டாக்ஸி மற்றும் பைக் டாக்ஸி நிறுவனங்களை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.
