Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை ராஜராஜ சோழன் சதய விழா – முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

தஞ்சை ராஜராஜ சோழன் சதய விழா – முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு!

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து அதிகாரிகள் ஆய்வு.

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழன் 1041-வது சதய விழா வரும் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பெரிய கோவில் வளாகத்தில் பந்தல் , மேடைகள் அமைக்கும் பணி , மின் விளக்குகள் அலங்காரம் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. சதய விழாவையொட்டி 22-ந்தேதி மாமன்னர் ராஜராஜ

சோழன் உருவ சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினர், அமைப்பு , இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்த நிலையில் இன்று மாமன்னர் ராஜராஜசோழன் சிலை அமைந்திருக்கும் பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன் ஆய்வு செய்தார். மாலை அணிவிக்க வருபவர்கள் ஏறி செல்ல

எந்த அளவிற்கு மேடை அமைக்க வேண்டும் , செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். தொடர்ந்து பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.
இதையடுத்து வாகனங்கள் பார்க்கிங் பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். பார்க்கிங்கில் உள்ள சாலைகளை சீரமைக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் நித்யா, தாசில்தார் மூர்த்தி , மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!