இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள ரோபோ ஹாராவ் நீர்வீழ்ச்சியில், அக்., 15 அன்று குளித்துக் கொண்டிருந்த விண்டி ரஹ்மா புத்ரி என்ற 25 வயது சுற்றுலாப் பயணி, எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து உயிரிழந்தார். ஆர்ப்பரிக்கும் நீரோட்டத்தில் சிக்கிய அவரை சக தோழிகள் காப்பாற்ற முயன்றும் பலனளிக்கவில்லை. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளுக்குப் பிறகு, வெள்ளிக்கிழமை, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
நீர்வீழ்ச்சியில் தோழிகள் கண்முன்னே இளம்பெண் பலி
