கொரோனா பெருந்தொற்று காலம் மனித உயிர்களை மட்டுமின்றி, கணவன்-மனைவி இடையேயான திருமண பந்தத்தையும் வேரோடு அழித்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார். 2019 முதல் 2022 வரையிலான கொரோனா காலகட்டத்தில் நடைபெற்ற திருமணங்கள், தம்பதிகளின் குடும்ப வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் திருமணம் செய்துகொண்ட பல தம்பதிகள், வெறும் 6 முதல் 9 மாதங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்துவிட்டு பிரிந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலத் திருமணங்கள்: 6 மாதங்களில் பிரிந்த தம்பதிகள்
