Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் குழந்தைகளுக்கு அ’ போட்டு கல்வியை துவங்கி வைத்த பெற்றோர்

கரூரில் குழந்தைகளுக்கு அ’ போட்டு கல்வியை துவங்கி வைத்த பெற்றோர்

கரூரில், விஜயதசமி விழா தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை.
குழந்தைகளை அரிசியில் அ எழுத வைத்து பெற்றோர்கள். இன்று விஜயதமியையொட்டி கரூர் மாவட்டத்தில் பல்வேறு கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்கார பூஜையின் போது

குழந்தைகளை கோவிலுக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்த்துள்ள பெற்றோர்கள். பள்ளியில் வைக்கப்பட்டிருந்த சரஸ்வதி உள்ளிட்ட சுவாமிகள் படங்களுக்கு

சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.

பின்னர், அரிசியை தாம்புலத்தில் பரப்பி அதில் தங்களது குழந்தைகளை தமிழ் உயிர் எழுத்தின் முதல் எழுத்தான அ வை எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வைத்தனர்.

முன்னதாக குழந்தைகளின் காதுகளில் மந்திரங்களை சொல்லி அதன் பின்னர் அரிசியில் பிள்ளையார் சுழி எழுதி, தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுத வைக்கப்பட்டு பள்ளியில் சேர்த்து விட்டனர்.

error: Content is protected !!