ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் ஆகஸ்ட் 20 அன்று 14 வயது சிறுமி ஒருவர் கருக்கலைப்பின் போது உயிரிழந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் காலித் உசேன் அந்தச் சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தை மறைக்க, மருத்துவமனை ஊழியர்களின் உதவியுடன் வயதை மாற்றி, போலியான ஆவணங்களை தயாரித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் 15 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தடயவியல் முடிவுகளுக்காக டிஎன்ஏ மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
கருக்கலைப்பின் போது 14 வயது சிறுமி மரணம்.. 15 பேர் கைது
