ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (அக்.19) ஒரே நாளில் 85 ஆயிரத்து 431 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததுடன், 22 ஆயிரத்து 966 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்றைய தினம் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 20 லட்சம் வசூலாகியுள்ளதுடன், 4 லட்சத்து 44 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் ஒரே நாளில் 85 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!
