சமூகவிரோதிகள் யார் ஆளுங்கட்சியாக வருகிறார்களோ அங்கு சென்று அடைக்கலம் அடைவதாகவும், தங்களை காப்பாற்றி கொள்ள ஆளுங்கட்சியை ஒரு கேடயமாக பயன்படுத்துவதாகவும் ‘வி த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஆளுங்கட்சியினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் காவல்துறை தங்களை நெருங்காது என்று அவர்கள் தவறாக நினைக்கிறார்கள் எனவும் அவர் பேட்டியளித்துள்ளார். மேலும், அரசியல் கட்சிகளை சமூகவிரோதிகள் தவறாக பயன்படுத்துவது சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் என அவர் கூறியுள்ளார்.
சமூகவிரோதிகள் ஆளும்கட்சியில் அடைக்கலம் ஆகிறார்கள் – அண்ணாமலை
