Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிறது தவெக அரசு – கனிமொழி குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சிகளை ஒடுக்குகிறது தவெக அரசு – கனிமொழி குற்றச்சாட்டு!

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமிகு. கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா வேட்பாளராகப் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்கள் தொடர்பாக, கார்த்திகா மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். குறிப்பாக, முதலமைச்சர் விஜய் பயணித்த பாதையில் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தேர்தல் காலத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக கார்த்திகா மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் தொடர்ச்சியாக, கோவையில் இருந்த கார்த்திகாவைக் கைது செய்வதற்காகத் தாராபுரம் காவல்துறையினர் சென்றுள்ளனர். அப்போது கார்த்திகாவையும் அவரது கணவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, ” தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கைக் காரணம் காட்டி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமிகு. கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும், கழக ஆட்சியில் ஜனநாயக வழியிலேயே அவர்கள் மீதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், த.வெ.க. அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நோக்கிலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு என நாள்தோறும் மக்கள் இன்னலுக்குள்ளாகும் வேளையில், மாற்றுக் கட்சியினரை ஒடுக்குவதில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து முறையான ஆட்சியை நடத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!