Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொன்றாலும் வங்கதேசம் செல்வேன் – ஷேக் ஹசீனா உறுதி!

கொன்றாலும் வங்கதேசம் செல்வேன் – ஷேக் ஹசீனா உறுதி!

வாஷிங்டன்; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, எதிர்வரும் டிசம்பர் மாதம் தாய்நாட்டிற்கு நிச்சயம் திரும்புவேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் அமெரிக்கா-வங்கதேச உறவுகள் மையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷேக் ஹசீனா, தான் டிசம்பரில் வங்கதேசம் திரும்புவதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

தான் நாடு திரும்பினால் அங்கு வைத்து கைது செய்யப்படலாம், சித்ரவதைக்கு உள்ளாக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம், இது எனக்கு நன்றாக தெரியும். என்னை கைது செய்தாலும் சரி, சித்ரவதை செய்தாலும் சரி, ஏன் என்னை கொன்றே போட்டாலும் சரி, நான் எதற்கும் அஞ்ச போவதில்லை. அங்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்வர்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். எனினும் வரும் டிசம்பர் மாதம் என் தாய்நாடான வங்கதேசத்திற்கு நிச்சயம் திரும்பி செல்ல வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ளேன் என்று கூறியுள்ளார். என் தாய்நாட்டு மக்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்ய அங்கு செல்வது எனது தலையாய கடமை என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட கடும் மாணவர் போராட்டம் மற்றும் அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!