தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையத்தின் தரவுகளின்படி, கடந்த 11 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும்போது நாடு முழுவதும் 773 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாகத் தலா 100 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ஆபத்தான இத்தகைய பணிகளுக்கு பதிலாக நவீன இயந்திரங்களை பயன்படுத்தி மனித கழிவு அகற்றும் முறையை முற்றுப்புள்ளியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கழிவுநீர் தொட்டி மரணங்கள்: தமிழ்நாட்டில் 100 தொழிலாளர்கள் பலி
