Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்பனை – ஒருவர் கைது!

ஸ்ரீரங்கத்தில் புகையிலை விற்பனை – ஒருவர் கைது!

திருச்சி திருவானைக்காவல் ரிங் ரோடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்த போது அந்த கடையில் புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது இதையடுத்து போலீசார் அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த 4 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கடையில் வேலை பார்த்த லால்குடி புள்ளம்பாடி ராஜீவ் காந்தி நகர சேர்ந்த சாமிநாதன் (வயது 55 )என்பவர்ரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தைபோலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!