நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர். இருப்பினும், அருவியின் அழகையும் இயற்கை காட்சிகளையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்கு மட்டும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
