கேரள Ex. CM பினராயி விஜயன் மற்றும் அவரது மகள் வீணா ஆகியோர் தாதுமணல் நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. முன்னதாக, முன் அனுமதி பெறாமல் ஒரு Ex. முதலமைச்சருக்கு எதிரான வழக்கை எவ்வாறு விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேவேளையில், பினராயி மற்றும் வீணாவுக்கு எதிரான FIR-ஐ ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
பினராயி விஜயன் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை
