கோவையில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலன் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, பள்ளி ஆசிரியர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் மாணவரைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் இரு மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் நடந்த சாதிய வன்கொடுமையே அகிலனின் தற்கொலைக்குக் காரணம் என அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் மாணவர் அகிலன் தற்கொலை வழக்கு – ஆசிரியர் கைது!
