Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவையில் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது!

கோவையில் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது!

கோவையில் புதிதாக கட்டிய வீட்டுக்கு வரி விதிக்க ரூபாய் 40,000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

கோவை, இடையார்பாளையம், காந்தி நகரை சேர்ந்தவர் சந்தோஷ். பில்டிங் காண்ட்ராக்டர் இவர் கோவை அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு புதிதாக வீடு கட்டிக் கொடுத்தார். அந்த வீட்டின் கட்டுமான பணி முடிந்ததை தொடர்ந்து மாநகராட்சி சார்பில் அந்த வீட்டுக்கு வரி விதிக்க வேண்டும் இதற்காக கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் பிரதீப் குமார் என்பவரை சந்தோஷ் அணுகினார். அப்பொழுது அவர் புதிதாக கட்டிய வீட்டுக்கு வரி விதிக்க வேண்டும் என்றால் தனக்கு ரூபாய் 50,000 லஞ்சம் தர வேண்டும் என கேட்டு உள்ளார். அதற்கு அவர் ரூபாய் 40 ஆயிரம் கொடுப்பதாக கூறினார். இதை அடுத்து பிரதீப் குமார் ரூபாய் 40 ஆயிரத்தை உடனடியாக கொடுங்கள் வீட்டுக்கு வரி விதித்து கொடுக்கிறேன் என்று கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் பணத்தை எடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு வெளியே வந்தார். ஆனால் லஞ்சம் கொடுக்க சந்தோசுக்கு மனசு இல்லை, எனவே அவர் இதுகுறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை கண்காணிப்பாளர் இமானுவேல் ஞானசேகரன் சந்தித்து புகார் அளித்தார்.

இதை அடுத்து லஞ்சம் கேட்கும் பில் கலெக்டர் பிரதீப் குமாரை பொறி வைத்து பிடிக்க காவல்துறையினர் முடிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் 40 ஆயிரம் நோட்டுகளை சந்தோஷயிடம் கொடுத்து அதை பில் கலெக்டர் பிரதீப் குமாரிடம் கொடுக்குமாறு கூறினார். உடனே சந்தோஷ் பிரதீப் குமாரை தொடர்பு கொண்டு பணத்தை ஏற்பாடு செய்து விட்டதாகவும், தற்பொழுது வந்து கொடுக்க உள்ளதாகவும் கூறினார். அதற்கு அவர் தான் வடக்கு மண்டல அலுவலகத்தில் இருப்பதாகவும், அங்கு வந்து பணத்தை கொடுங்கள் என்றும் கூறி உள்ளார். இதை தொடர்ந்து கோவை வடக்கு மண்டல அலுவலகத்திற்குச் சென்ற சந்தோஷ் அங்கு இருந்த பில் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ரசாயனம் தடவிய ரூபாய் 40 ஆயிரம் நோட்டுகளை கொடுத்தார். அப்பொழுது அங்கு மறைந்து இருந்த காவல்துறை கண்காணிப்பாளர் இமானுவேல் ஞானசேகரன், ஆய்வாளர் சீலா மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிரதீப் குமாரை கையும், களவுமாக மடக்கிப் கைது செய்தனர். அத்துடன் அவர் வாங்கிய லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து காவல் துறையினர் பிரதீப் குமார் பணியாற்றி வரும் அறை மற்றும் அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தினர். அதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!