வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும்; காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்.26ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். புயலாக உருவாகி மேலும் வலுப்பெற்று வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். புயலாக உருவாகும் பட்சத்தில் வங்கதேசம் பரிந்துரைத்துள்ள அர்னாப்” என பெயர் சூட்டப்படும்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – அக்.26ல் புயலாக வாய்ப்பு!
