திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பெரியகரும்பூர் கிராமத்தில் நடவுப் பணிகளுக்காக 6 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் தங்கியிருந்தனர். இந்த நிலையில் மழையில் முளைத்திருந்த காளான்களைப் பறித்துச் சமைத்துச் சாப்பிட்ட தொழிலாளர்கள் 12 பேருக்கும் திடீரென கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக தீவிரமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மழைக் காளான் சாப்பிட்ட 12 வடமாநிலத் தொழிலாளர்கள் பாதிப்பு!
