Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் மழையால் 35 ஆண்டு பழமையான வீடு இடிந்து விழுந்தது!

கரூரில் மழையால் 35 ஆண்டு பழமையான வீடு இடிந்து விழுந்தது!

கரூரில் மழையின் காரணமாக 35 ஆண்டு காலம் பழமையான வீடு இடிந்து விழுந்தது – அருகில் இருக்கும் வீடுகளில் விழாமல் இருக்க தீயணைப்பு துறை வீரர்கள் மீதமுள்ள சுவற்றை இடித்து அகற்றினார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.வெள்ளாளபட்டி இந்திரா நகரில் 45 வீடுகள் உள்ளன. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரால் இந்த குடியிருபுகள் கட்டப்பட்டு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வீடுகள் முழுவதும் நனைந்து ஈரமாக காணப்பட்ட நிலையில்

குஞ்சம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டு மேற்கூரை சிமெண்ட் தளம் இடிந்து விழுந்தது.

அந்த மூதாட்டி இரவு நேர வேலைக்கு சென்று இருந்ததால் உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் இடிந்த வீட்டின் சுவர்களை இடித்து அகற்றினர்..

இந்த பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட வீடுகள் இது போன்று இடிந்து நிலையில் உள்ளதால்

அதனை கணக்கெடுக்கும் பணியில் சார் ஆட்சியர் வெங்கடேசன், வட்டாட்சியர் பிரகாஷ்

தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பழுதான வீடுகளை இடித்து விட்டு புதிதாக வீடுகளை கட்டித்தரப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!