Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டெங்கு பரவல் அதிகரிப்பதற்கு தவெக அரசு தான் காரணம்- மேயர் பிரியா

திமுக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் அம்பத்தூர் கொரட்டூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கட்சியின் கட்டமைப்பு விரிவு படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மேயர் பிரியா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோசப் சாமுவேல் ரவிச்சந்திரன் மண்டல குழு தலைவர் பி கே மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் டெங்கு விழிப்புணர்வை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வீடுகளில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தோம். முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் மாநகராட்சி முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தார். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் வெற்றியை கொண்டாடுவதில் இவ்வளவு காலம் சென்று விட்டது. அவர்களின் மெத்தன போக்கே டெங்கு அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது என கூறினார்.
மாமன்ற உறுப்பினர்களுக்கான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை நிதி ஒதுக்க கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருந்தோம் மழைக்காக நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுக்க வில்லை, சமீபத்தில் முதலமைச்சர் ஆய்விற்காக மாநகராட்சி வந்த போது கூட எனக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை. நான் வேறு ஒரு ஆய்வில் இருந்தபோது எனக்கு தகவல் கிடைத்தது. முன்கூட்டியே தெரிவித்திருந்தால் தான் முதலமைச்சராயில் பங்கேற்று இருக்க முடியும் இருக்க முடியும். முதலமைச்சர் ஆய்வில் மேயர் வரவில்லை என குற்றச்சாட்டை வைக்கின்றனர். மேயர் அரசாங்கத்தை புறக்கணிக்கவில்லை அரசாங்கம் தான் மேயரை புறக்கணித்து இருக்கிறது.
மேயர் வார்டில் முகாமில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியிருந்தார்,
அன்று மழை காரணமாக திடீரென பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டது அதனால் மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவு வீணாக கூடாது என விநியோகம் செய்ய சொல்லி இருந்தோம் அதைக் கூட தெரிந்து கொள்ளாமல் சட்டமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார் என கூறினார்.

error: Content is protected !!