சென்னை நீலாங்கரையில் சொகுசு கார் மோதி மூதாட்டி பலியானது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த கார் மோதியதில் 100 அடி தூரத்திற்கு மூதாட்டி தூக்கி வீசப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வருவதற்கே மிக தாமதமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் போலீஸும் அலட்சியமாக செயல்பட்டதாக உறவினர்கள் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியுள்ளனர். 2 கார்கள் இடையே ரேஸ் வைத்து அதிவேகமாக சென்றதாகவும் கூறப்படுகிறது.
கார் மோதி 100 அடி தூக்கி வீசப்பட்டு மூதாட்டி பலி… சென்னையில் துயரம்
