கரூர் அருகே கனமழையால் நெல் வயல்கள் நீரில் மூழ்கி சேதம் – வடிகால் வாய்க்கால்களைத் தூர்வார விவசாயிகள் கோரிக்கை.
கரூர் மாவட்டம், கட்டளை பகுதியில் பெய்த கனமழையால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மேலும், நடவு செய்வதற்குத் தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கான நெல் நாற்றுகளும் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தின் புலியூர், வீரராக்கியம், பால்ராஜபுரம், ரங்கநாதபுரம் உள்ளிட்ட

சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
மதிக்கெட்டான், வெடுக்கட்டான் ஆகிய இரண்டு பாசன வடிகால் வாய்க்கால்களும் முறையாகத் தூர்வாரப்படாததே வயல்களில் தண்ணீர் தேங்குவதற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், இரண்டு வடிகால் வாய்க்கால்களையும் போர்க்கால அடிப்படையில் தூர்வாரி, வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
