சேலம் ஏத்தாப்பூர் கோவில் கும்பாபிஷேக பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிய எடப்பாடி காவல் நிலைய காவலர் தினேஷ் (38), கந்தம்பட்டி மேம்பாலத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். லாரியை முந்த முயன்றபோது பின்னால் வந்த கார் பைக் மீது மோதியதில் நிலைதடுமாறி லாரி சக்கரத்தில் சிக்கினார். படுகாயம் அடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி காவலர் பலி…
