Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டைகர் ஷெராப்புக்கு முன் அமீர்கானை குறிவைத்த பிஷ்னோய் கும்பல்

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கானை பிஸ்னோய் கும்பல் குறி வைத்தது அம்பலமானது. நடிகர் டைகர் ஷெராப் சுட்டுக்கொல்ல முயன்ற பிஷ்னோய் கும்பல் முதலில் அமீர்கானுக்கு குறிவைத்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. நடிகர் டைகர் ஷெராப் சுட்டுக்கொல்ல முயன்ற வழக்கின் விசரணையின் போது இந்த தகவல் வெளி வந்திருக்கிறது.

அண்மையில் நடிகர் டைகர் ஷெராப் காரில் சென்றபோது அவரை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்டவிசரணையில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அமீர்கானை பிஸ்னோய் கும்பல் குறி வைத்தது அம்பலமானது. அமீர்கானை கொல்லும் முயற்சி தோல்வியடைந்ததால் ஷெராப்பை கொல்ல முயற்சித்தது தெரிய வந்துள்ளது

கடந்த ஜூலையில் அமீர்கானை கொல்லப் போவதாக பிஸ்னோய் கும்பல் சமூக வலைதளத்தில் பகிரங்க மிரட்டல் விடுத்தனர். சனாதனத்தை மீறி கவுரி ஸ்ப்ராத்தை திருமணம் செய்ததற்காக பிஸ்னோய் கும்பல் அமீர்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அமீர்கான் வீடு அருகே விடுதியில் தங்கி பிஸ்னோய் கும்பல் நோட்டமிட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

நடிகர் டைகர் ஷெராப் காரில் சென்ற போழுது, இரு சக்கர வாகனத்தில் வந்த பீகாரைச் சேர்ந்த ஹிருத்திக் என்ற ரோஷன் (22), ஹரியானாவைச் சேர்ந்த ரேஹான் (18) மற்றும் பூல் சிங் (18) ஆகியோர் அவரது காரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் டைகர் ஷெராப் கார் ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயமடைந்தனர். நல்வாய்ப்பாக டைகர் ஷெராப் காரை உடனடியாக ஒட்டி சென்று தப்பினர்.

இந்த விவகாரத்தில் வழக்கு தீவிரமடைந்து விசாரனை மிக தீவிரமாக நடைபெற்று 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அமீர்கானுக்கு பிஷ்னோய் கும்பல் குறிவைத்து அம்பலமாகியுள்ளது.

error: Content is protected !!