புரட்டாசி மாதம் முடிந்தநிலையிலும் ஐப்பசி பவுர்ணமி மற்றும் அன்னாபிஷேகம் போன்ற விசேஷ நாட்கள் காரணமாக சென்னை காசிமேடு மீன் சந்தையில் பொதுமக்கள் வரத்து வழக்கத்தை விட குறைவாக காணப்பட்டது. இருப்பினும், கடலில் இருந்து மீன்களின் வரத்து கணிசமாக குறைந்ததால் காசிமேடு சந்தையில் மீன்களின் விலை கடந்த வாரங்களை விட உயர்ந்து விற்பனையானது. அதன்படி, வஞ்சிரம் மீன் கிலோ ரூ.950-க்கும், கொடுவா ரூ.600-க்கும் விற்பனையான நிலையில், அடுத்த வாரங்களில் பொதுமக்கள் வரத்து அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஐப்பசி பவுர்ணமியையொட்டி விற்பனை மந்தம்: மீன்கள் விலை உயர்வு
